போலீஸ் போல வேடமிட்டு கல்லா கட்டிய இளைஞர் கைது

கோவையில் போலீஸ் போல வேடமிட்டு வாகன சோதனையில் வசூல் மன்னனாக இருந்த பலே பேர்வழியை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் போல வேடமிட்டு கல்லா கட்டிய இளைஞர் கைது
x
விருதுநகர் மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த பாண்டி குமார் என்ற இளைஞர், கோவை சரவணம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை எஸ்.ஐ. உடையில் இருந்த ஒருவர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்த போதிலும் ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் பறித்துச் சென்றதால் சந்தேகமடைந்த அவர், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வாகன சோதனை செய்த நபர் மோசடி பேர்வழி என தெரியவந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்நத் வினு என்ற வினோத் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸ் என கூறி அதற்கேற்றார் போல போலீஸ் உடையணிந்து மிடுக்காக சுற்றி வரும் அவர், வாகன சோதனையில் பணத்தை கறந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்