மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் - வரலாற்று துறை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் - வரலாற்று துறை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு
x
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ். இவர்,  கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் புகார் வந்தது. மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து அவர் ஆறு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடும் எச்சரிக்கைக்கு பிறகு அவர் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். உதவிப் பேராசிரியர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம், உதவி பேராசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதை அடிப்படையாக கொண்டு மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்