ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்

ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த பெண்ணிடம் அன்பாக பேசி அவரை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்
x
ஆந்திர மாநிலம் தாடிப்பத்திரியை சேர்ந்த சிவடு - ஸ்வர்ணலதா தம்பதியருக்கு 4 வயதில் ஒரு மகனும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கணவருடன் கோபித்துக் கொண்ட ஸ்வர்ணலதா, தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கும் கோபித்துக் கொண்ட அவர், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதைத் தெரிந்து கொண்ட ஒரு பெண், ஸ்வர்ணலதாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவருக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்து தன் வசப்படுத்திய அவர் ஸ்வர்ணலதாவை திசை திருப்பி குழந்தையை கடத்திச் சென்றார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்ததில் பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரது செல்போன் நம்பரை சோதனை செய்ததில் அது காஞ்சிபுரத்தில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்