"மூடப்பட்ட குடிநீர் ஆலை - உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்" - 15 நாட்களுக்குள் முடிவெடுக்கு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூடப்பட்ட குடிநீர் ஆலை - உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - 15 நாட்களுக்குள் முடிவெடுக்கு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,  அனைத்து மாவட்டங்களிலும், நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்யவும், குடிநீர் உற்பத்தி ஆலைகள் எடுக்கும் நிலத்தடி நீரின் அளவின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது குறித்து தெரிவிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக, கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்