தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,024 உயர்வு - விலை ஏற்றம் தொடரும் என மக்கள் அச்சம்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஆயிரத்து 24 ரூபாய் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் , இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 24 ரூபாய் அதிகரித்து, 33 ஆயிரத்து 224 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 153 ரூபாயாக உள்ளது. கடந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு 33 ஆயிரத்து 300 ரூபாயைக் கடந்த நிலையில், அதன் பின்னர் சரிந்து வந்தது. நேற்று 32 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பங்குச் சந்தைகளில் இருந்து, முதலீட்டாளர்கள் வெளியேறி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அதன் காரணமாக ஆபரணத் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
Next Story

