செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிவகாசியில் வார இதழ் ஒன்றின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த செய்தியாளர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
சிவகாசியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் வார இதழ் ஒன்றின் விருதுநகர் மாவட்ட செய்தியாளராக உள்ளார். நேற்று கார்த்திக்கை மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த கார்த்திக் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்திக் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும், காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ராஜாவர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வருவதாக, அந்த வார இதழில் செய்தி வெளியாகி இருந்த  நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்