பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பம் : 8.32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பம் : 8.32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
x
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 16 தேர்வு மையங்களில் சுமார் 8 லட்சத்து 32 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 779  மாணவர்கள் 159 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர் , மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி  புழல் ஆகிய  சிறைகளிலுள்ள சிறைவாசிகள் சுமார் நூறு பேர்  11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.  தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதவுள்ள சுமார் 4 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்