முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த ஜமாஅத் நிர்வாகிகள்

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மாவட்ட ஜமாஅத் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த ஜமாஅத் நிர்வாகிகள்
x
சேலம் செல்லும் வழியில் கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,  கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, குடியுரிமை சட்டம் அச்சம் பற்றிய NRC, NPR முறையை தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அமல்படுத்தாது என தீர்மானம் நிறைவேற்ற கோரும் மனுவை முதலமைச்சரிடம் அவர்கள் அளித்ததாக கூறப்படுகிறது.  முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொது செயலாளர் ஜப்பார், சிறுபான்மையினர் பாதிக்கப்படும் நிலையை இந்த அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்