பருவத்தேர்வு விடைத்தாள்கள் மர்ம நபர்களால் கிழிப்பு - போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசுப்பள்ளியில் பருவத்தேர்வு விடைத்தாள்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவத்தேர்வு விடைத்தாள்கள் மர்ம நபர்களால் கிழிப்பு - போலீசார் விசாரணை
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அரசுப்பள்ளியில் பருவத்தேர்வு விடைத்தாள்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் அருகே உள்ள அரசு பள்ளியில், சுமார் 200 மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை ஆசிரியர்கள் வந்து பார்த்தபோது, பருவத்தேர்வு விடைத்தாள்கள் கிழிந்த நிலையில் வளாகத்தில் சிதறி கிடந்துள்ளன. பள்ளியின் கழிவறை கதவுகளும் உடைந்து இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அளித்த தகவலை அடுத்து, போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்