அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் - 36 ஆழ்துளை கிணறுகள் சீல் வைப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி குடிநீர் உறிஞ்சிய 36 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி குடிநீர் உறிஞ்சிய 36 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உரிய அனுமதியின்றியும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு குடிநீர் கேன்களிலும், லாரிகளிலும் விற்பனை செய்து வருவதாக வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் அனுமதியின்றி செயல்பட்ட 36 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைத்தனர். சோதனை நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
Next Story

