மகன் கொடுமை தாங்காமல் தங்களை கருணை கொலை செய்யக்கோரி ஆட்சியரிடம் முதிய தம்பதி மனு
திருப்பூரில் மகன் கொடுமை தாங்காமல், வயது முதிர்ந்த தம்பதியினர், தங்களை கருணை கொலை செய்யக்கோரி, ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு வழங்கினர்.
திருப்பூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் - கருணையம்மாள் தம்பதியினருக்கு, பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்ததால் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், சொத்துக்களை பறித்துக்கொண்டு மகன் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி, சென்னியப்பன் - கருணையம்மாள் தம்பதியினர், ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னியப்பன், தங்கள் வீட்டின் மின்சாரத்தை துண்டித்துடன், குடிநீர் பிடிக்கவும் மகன் அனுமதிப்பதில்லை என கூறினார். மேலும், விபத்தில் கால் சேதமடைந்ததால், தாங்கள் வாழவே வழியின்றி தவித்து வருவதாக கூறிய அவர், உரிய நீதி கிடைக்காவிட்டால், தங்களை கருணை கொலைசெய்ய அனுமதிக்க வேண்டுமெனவும், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.
Next Story

