போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய ரவுடி கைது

மேட்டுப்பாளையத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலரை கத்தியால் குத்திய பிரபல ரவுடி சிட்டி பாபு என்கிற சையது இப்ராஹிமை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய ரவுடி கைது
x
பழைய குற்றவழக்குகளில் தொடர்புடைய கொடலூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிட்டி பாபு என்கிற சையது இப்ரஹிமை, போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் அவர் மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.  அங்கு சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், திலக் மற்றும் தலைமை காவலர் பிரபாகரன் ஆகியோர்,சிட்டி பாபு வை பிடிக்க முயன்றனர். அப்போது  மறைத்து வைத்திருந்த கத்தியால் 3 பேரையும் சிட்டிபாபு குத்தி விட்டு தப்பியோடி விட்டார். அவரை தேடி வந்த தனிப்படை போலீசார், சாமண்ணா வாட்டர் ஹவுஸ் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த சிட்டிபாபுவை  கைது செய்தனர்.அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்