சென்னை : ஜாமீனில் வந்தவர் பண மோசடி வழக்கில் கைது

பாலியல் வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகண்டன், மேலும் ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : ஜாமீனில் வந்தவர் பண மோசடி வழக்கில் கைது
x
அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நிரஞ்சினி, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இணையதளம் வாயிலாகவும் நிரஞ்சினி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், விமல் சந்த் என்பவர் ஸ்ரீகண்டன் மீது பண மோசடி செய்திருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஸ்ரீகண்டன் கைது செய்யப்பட்டார். ஏற்கனவேஅவரது நண்பர்கள், ஜெயபாலாஜி, நடராஜன், புவியரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்