பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.05 லட்சம் கோடி - தொடர்ந்து நான்காவது மாதமாக வரி வசூல் உயர்வு

பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.05 லட்சம் கோடி - தொடர்ந்து நான்காவது மாதமாக வரி வசூல் உயர்வு
x
பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தொடர்ந்து நான்காவது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் ஒரு கோடியை கடந்து வருவதாக தெரிவித்துள்ளது. ஜனவரி மாத ஜி.எஸ்.டி வருவாய், ஒரு லட்சத்து  பத்தாயிரம் கோடியாக இருந்தது.  பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டியாக 20 ஆயிரத்து 569 கோடியும், மாநில ஜி.எஸ்.டியாக 27 ஆயிரத்து 348 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாக 48 ஆயிரத்து 503 கோடி ரூபாயும், கூடுதல் வரி மூலம் 8 ஆயிரத்து 947 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்