சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற மீனவ இளைஞர்
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று குமரி மாவட்ட மீனவ இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று குமரி மாவட்ட மீனவ இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ராமன் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த அஜய் பிராக்ஸ், கிக் பாக்சிங்கில் தீவிர பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் 64 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது தனக்கு பயிற்சியை தொடர போதுமான வருமானம் இல்லை எனவும் அரசு உதவி செய்தால் தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்தியாவிற்காக மேலும் பதக்கங்கள் வெல்வேன் எனவும் அஜய் பிராக்ஸ் கூறியுள்ளார்.
Next Story

