விபத்தில் சிக்கிய 75 வயது மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ஆட்சியர்
சிவகங்கை அருகே சாலை விபத்தில் சிக்கிய 75 வயது மூதாட்டியை, மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்திலேயே ஏற்றிவந்து, மருத்துவமனையில் அனுமதித்தார்.
சிவகங்கை அருகே சாலை விபத்தில் சிக்கிய 75 வயது மூதாட்டியை, மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்திலேயே ஏற்றிவந்து, மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி அல்லி, அங்கிருந்த சாலையை கடக்க முயன்றார். அப்போது வைக்கோல் ஏற்றிவந்த டிராக்டர் மோதியதில், மூதாட்டி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியே சென்ற சிவகங்கை ஆட்சியர், மூதாட்டியை மீட்டு, தனது காரிலேயே மருத்துவமனையில் அனுமதித்தார். ஆட்சியரின் இந்த செயலுக்கு, சமூகவலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
Next Story

