நாட்டில் வேகமாக செயல்படும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கருத்து
புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நாட்டில் வேகமாக செயல்படும் மாநிலத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக கூறினார்.
புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நாட்டில் வேகமாக செயல்படும் மாநிலத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக கூறினார். தனது 27-ஆண்டு கால பொதுவாழ்வில், இது போன்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என கூறினார். அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக அவர் கூறினார். இதற்கு முன்னர் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு பந்தில், 11 ரன் எடுக்கக்கூடிய ஆற்றல் பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
Next Story

