16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
16 வயது சிறுமியை திருமணம் செய்தவர், சிறுமியை காதலித்து அழைத்துச்சென்ற இளைஞர் உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் மரக்கடை பகுதியை சேர்ந்த முகமது நிஷார் என்பவர், கடந்தாண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில், சிறுமியின் வீட்டருகே தங்கி இருந்த, மணப்பாறையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதை தொடர்ந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி முதல் மனைவியை காணவில்லை என கணவர் முகமது நிஷார், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், காணாமல்போன பெண்ணிற்கு வயது 16 என்பதும், ரஞ்சித்குமாருடன் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சிக்கு சென்றதும் தெரியவந்தது. சிறுமியை மீட்ட காவல்துறை, ரஞ்சித்குமாரை போக்ஸோ, பிரிவின் கீழ் கைது செய்தனர். 16 வயது சிறுமியை திருமணம் செய்ததற்காக முகமது நிஷாரையும், திருமணம் நடத்தி வைத்த முகமது நிஷாரின் பெற்றோர் அப்துல் சலாம் - பர்சானா ஆகியோரை போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

