"அரசு செய்ய வேண்டியதை திமுக செய்கிறது" - உதயநிதி ஸ்டாலின்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் அரசு செய்ய வேண்டியதை திமுக செய்து வருகிறது என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அரசு செய்ய வேண்டியதை திமுக செய்கிறது - உதயநிதி ஸ்டாலின்
x
திமுக தலைவர் ஸ்டாலினின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தமிழர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது. இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில், அரசு செய்ய வேண்டியதை, திமுக செய்து வருவதாக தெரிவித்தார். இந்த விழாவில் உதயநிதிக்கு, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சந்தன மரக்கன்று மற்றும் கருணாநிதியின் மார்பளவு சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்