ரசாயன கிடங்கு தீ விபத்து : "காற்று மாசு அதிகரிக்கவில்லை" - மாசுக் கட்டுப்பாட்டுத் துறை
ரசாயன ஆலை வெடித்த சென்னை மாதவரம் பகுதியில், கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காற்று மாசு உள்ளது என மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசாயன ஆலை வெடித்த சென்னை மாதவரம் பகுதியில், கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காற்று மாசு உள்ளது என மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடித்து சிதறிய ரசாயன கிடங்கைச் சுற்றி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடமாடும் காற்று கண்காணிப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை காற்று மாசு அளவிடப்படுகிறது. ஆய்வில், தீ விபத்தால் காற்று மாசு அதிகரிக்கவில்லை என்றும், சராசரி நிலையிலேயே இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கார்பன் மோனாக்சைடு, சல்பர் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்ற காற்றில் கலந்துள்ள வாயுக்களின் அளவு சராசரியாகவே உள்ளது என அதிகாரிகள் கூறுயுள்ளனர்.
Next Story

