"மக்களை பிளவுப்படுத்தும் சக்திகளை முறியடிப்போம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மக்களை பிளவுப்படுத்தும் சக்திகளை முறியடிப்போம் என்றும், வதந்திகளை நம்பாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமநாதபுரத்தில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினர்.
பட்டணம்காத்தான் என்ற பகுதியில் அமைய உள்ள இந்த புதிய மருத்துவ கல்லூரியானது, 325 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. 750 படுக்கை வசதிகளுடன், 6 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ள இந்த மருத்துவ கல்லூரியில், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு 300 மருத்துவர்கள் உள்பட 900 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களை பிளவுப்படுத்தும் சக்திகளை முறியடிப்போம் என்றும், வதந்திகளை நம்பாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ராமநாதபுரம் அடுத்த பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியபின் அவர் இவ்வாறு பேசினார்.
Next Story
