இன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலின் - பிறந்தநாள் சபதமாக என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்...?

பொதுத் தேர்தலுக்கு சரியாக ஓராண்டு உள்ள நிலையில் அரசியலில் பல தடைகளை தாண்டிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு சவால்களும் எதிர்நோக்கி இருக்கிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலின் - பிறந்தநாள் சபதமாக என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்...?
x
1953 ல் பிறந்து 14 வயதில் அரசியலில் களம் கண்ட ஸ்டாலின், 
திமுகவில் இளைஞரணி செயலாளர், ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ, கட்சியின் பொருளாளர் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்ந்தார். 

2017ல் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

2019ஆம் ஆண்டு துவக்கத்தில் கட்சியின் ஆரம்ப நிலையில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி நிர்வாகிகளை மாற்றி தன் அதிரடியை தொடங்கினார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி, 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி என தனது ஆளுமையை பதிவு செய்தார். 

இருந்த போதிலும் வரும் 2021 பொதுத் தேர்தல்  , திமுகவின் திறமைக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலினுக்கு முன்னால் இருக்கும் சவால்களையும், அதை அவர் எப்படி கையாள வேண்டும் என தன் கருத்தை பதிவு செய்கிறார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்... 

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வளர்ச்சி உச்சத்தில் இருந்த நிலையில் அவர்களை அதிமுக நெருங்கி வந்து விட்டதாகவும், இதனை எல்லாம் முறியடித்தால் தான் தேர்தலில் இலக்கை எட்ட முடியும் என்கிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்

தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என கூறும் கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன், இதனை ஸ்டாலின் திறமையாக எதிர்கொள்வது அவசியம் என்ற கருத்தை முன்வைக்கிறார். 

கண் முன்னே இருக்கும் சவால்களை எதிர்கொண்டு திமுக அரியணை ஏற்க, ஸ்டாலின் பிறந்தநாள் சபதம் ஏற்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்