ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா - மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அங்கிருந்து, சாலை மார்க்கமாக சென்ற முதலமைச்சர், கட்சியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காலை 10 மணி அளவில் ராமநாதபுரத்திலும், மாலை 3 மணி அளவில் நடைபெறும் விழாவில் விருதுநகரிலும், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
Next Story

