கடத்தப்பட்ட 8 மாத குழந்தை மீட்பு - போலீஸ் விசாரணையில் கடத்தல் கும்பல் கைது

சென்னையில் கடத்தப்பட்ட 8 மாத கைக் குழந்தை மீட்கப்பட்டது.
கடத்தப்பட்ட 8 மாத குழந்தை மீட்பு - போலீஸ் விசாரணையில்  கடத்தல் கும்பல் கைது
x
சென்னையில் கடத்தப்பட்ட 8 மாத கைக் குழந்தை மீட்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட  நரிக்குறவர் மக்கள் பெசன் நகர் கடற்கரையில் பலூன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்றிரவு பாஷா -சினேகா தம்பதியின் 8 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதுகுறித்து விசாரித்த சாஸ்திரி நகர் போலீஸார், சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் குழந்தையை மறைத்து எடுத்துச் செல்லுவது தெரிந்தது. இதையடுத்து, எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய கும்பலையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை,  தமிழ் அரசன் என்பவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு  விற்பனை செய்ததும் தெரியவந்தது.Next Story

மேலும் செய்திகள்