சேதமடைந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்த சிறுமி - கழிவு நீர் தொட்டியை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேலத்தில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்
சேதமடைந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்த சிறுமி - கழிவு நீர் தொட்டியை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
சேலம் புதூர் கல்லாங்குத்து பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் கழிவுநீர் தொட்டியில், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் - ஜோதி தம்பதியரின் 10 வயது மகள் ஸ்ரீமதி தவறி விழுந்தார். இதில், கழிவுநீர் தொட்டியில் முழ்கிய சிறுமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் தொட்டியை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சமரச பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்கள் மற்றும்  போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கழிவுநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்