பொதுத்தேர்வு : "ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் தேர்வெழுத நிரந்தர தடை" - அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை

10,11 மற்றும்12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது
பொதுத்தேர்வு : ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் தேர்வெழுத நிரந்தர தடை - அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை
x
இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வுக்கூடத்தில், மாணவர்கள் தாமாகவே முன்வந்து காப்பி எடுப்பதற்காக கொண்டுவந்த துண்டுச்சீட்டு, புத்தகம் போன்றவற்றை ஒப்படைத்தால், தேர்வுக்கூட கண்காணிப்பாளரின் எச்சரிக்கையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றி எழுதுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிடிபடும் மாணவர்கள், தேர்வு கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள அரசு தேர்வுகள் துறை, ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், நிரந்தரமாக தேர்வு எழுதுவதிலிருந்து தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், தவறுகளில் ஈடுபடுவோர்  மீது எடுக்கப்படும்16 வகையான நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்