ஹார்லி டேவிட்சன் பைக் இறக்குமதி வரி நீக்கம்? - டிரம்ப் வருகைக்கு பின்னர் நிகழும் அதிரடி மாற்றம்?

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்லி டேவிட்சன் பைக் இறக்குமதி வரி நீக்கம்? - டிரம்ப் வருகைக்கு பின்னர் நிகழும் அதிரடி மாற்றம்?
x
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை  இந்தியா மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரி ரத்து செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்து வருகிறது. இது தொடர்பாக டிரம்ப் ஏற்கனவே விமர்சனம் செய்து வந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் வரியை 50 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது, இந்த நிலையில், டிரம்பின் இந்திய வருகைக்கு பின்னர் அமெரிக்க பைக்குகளுக்கான வரியை நீக்க இந்தியா ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்