வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் : கடத்தல்காரர்கள் தப்பியது எப்படி?

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அவர்களை தாக்கிவிட்டு 18 குருவிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் : கடத்தல்காரர்கள் தப்பியது எப்படி?
x
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அவர்களை தாக்கிவிட்டு 18 குருவிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து 10 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் குழு உஷார் நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்தனர். 

இந்த கடத்தல் குழுவுக்கு சுங்கத்துறை அதிகாரிகளும் உடந்தை என்ற தகவல் வெளியானதால் அதிர்ந்து  போன அவர்கள், கண்காணிப்பை  தீவிரப்படுத்தி இருந்தனர். அப்போது மலேசியா, இலங்கை, துபாய் விமானங்களில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து விட்டு அனுப்பினர். 

இதில் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்த 18 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். இவர்களிடம் மட்டும் 12 கிலோ மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த கடத்தல் பொருட்களின் மதிப்பு மட்டும் பல கோடிகளுக்கும் மேல் என்பதால் அதிர்ந்து போன அதிகாரிகள் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். 

அப்போது தான் அவர்கள் 18 பேரும் குருவிகள் என தெரிய வந்தது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் இவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகளும் உடந்தை என்பது உறுதியானது. 18 பேரையும் விசாரணைக்காக வெளியே அழைத்து வந்த போது அவர்களை வரவேற்க காத்திருந்த உறவினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. 

திட்டமிட்ட சம்பவம் போல் இது நடந்து கொண்டிருக்கையில், அதிகாரிகளை தாக்கிவிட்டு குருவிகள் 18 பேரும் தப்பி ஓடினர். அதிலும் முழுக்கவே பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் விமான நிலையத்திற்குள் அவர்கள் தப்பி ஓடியது எப்படி என்ற கேள்வியே இங்கே பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளது. 

கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என 5 கோடி மதிப்பிலான பொருட்கள் அதிகாரிகள் வசம் இருந்த நிலையில் 18 பேரும் தப்பி ஓடிய சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்