இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்கள் யார்..?

இந்திய அளவில் முதல் 10 பெரும் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.
x
போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும், இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் டி.மார்ட் நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தாமனி  புதிதாக இடம்பிடித்துள்ளார். இவர், இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 4 லட்சத்து 08 ஆயிரம் கோடி ரூபாய்  சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

* இரண்டாவது இடத்தில், டி.மார்ட் நிறுவனத்தின் தலைவர்  ராதாகிருஷ்ணன் தாமனி ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 350 கோடி ரூபாய் சொத்துகளை கொண்டுள்ளார்.ஹெச்.சி.எல் நிறுவனத்தின்  ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புகளுடன் 3 வதாக இடம் பெற்றுள்ளார்.கோட்டக் மஹிந்திராவின் தலைவர் உதய் கோட்டக், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய், அதானி குழும தலைவர் கெளதம் அதானி 98 ஆயிரத்து 600 கோடி ரூபாய்  சொத்து மதிப்புகளுடன் அடுத்தடுத்து உள்ளனர்.

* இரும்பு உருக்கு துறையில் ஈடுபட்டுள்ள லக்‌ஷ்மி மிட்டல் 86 ஆயிரத்து 500 கோடி சொத்துகளைக் கொண்டுள்ளார்.பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சுனில் மிட்டல் குடும்பம், 84 ஆயிரத்து 300 கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்டுள்ளது.70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் பூனாவாலா குழுமத்தின் சைரஸ் பூனாவாலா 8 வது இடத்தில் உள்ளார்.

* பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் பிர்லா 69 ஆயிரத்து 300 கோடி ரூபாய் சொத்துகளை வைத்துள்ளார்.
சிமென்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்தின் பெனு கோபால் பங்குர், 55 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் 10 வது இடத்தில் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்