சிஏஏ எதிர்ப்பு : "சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட முடிவு" - தடையை மீறி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
சிஏஏ எதிர்ப்பு : சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட முடிவு - தடையை மீறி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையை இன்று  முற்றுகையிட போவதாக  இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனால்  சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். தடையை மீறி சட்டப்பேரவையை நோக்கி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும், மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும்  அவர் கூறினார். 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், 3 தற்காலிக கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் . போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்