ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் கொலை : கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்
பதிவு : பிப்ரவரி 19, 2020, 02:12 AM
சேலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் நரிகரடை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளரான அறிவழகன், வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் அமுதா தனியாக இருந்துள்ளார். 

அப்போது வீட்டுக்கு அமுதாவின் மாமனார் பழனி வந்ததாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அமுதாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அமுதா பிணமாக கிடந்துள்ளார். 

தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்ற பழனி, தன் மருமகளை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். 
அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை கூறி அதிரவைத்துள்ளார். 

திருமணமாகி வீட்டுக்கு வந்த முதல் நாளில் இருந்தே மருமகள் அமுதா மீது பழனிக்கு ஒரு கண் இருந்துள்ளது. எப்படியும் அவரை அடைந்தே தீருவது என சுற்றி வந்த அவருக்கு அமுதா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அமுதா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் பழனி. 

இதனிடையே அமுதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருப்பதாக அரசல் புரசலாக வெளியான செய்தி மாமனார் பழனியின் காதுக்கும் சென்றுள்ளது. இதனால் ஆவேசமான பழனி, நேராக மகன் வீட்டுக்கு சென்று மருமகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மற்றவர்களோடு இணங்கும் நீ, என்னுடன் வர மறுப்பது ஏன்? என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதும் அமுதா எதிர்ப்பு தெரிவித்ததால் கோபத்தின் உச்சியில் இருந்த பழனி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து அமுதாவை கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் இதுபோன்ற சிக்கல்களால் உயிர்கள் தான் காவு வாங்கப்படுகிறது... 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

651 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

484 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

176 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

77 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

59 views

பிற செய்திகள்

மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

3 views

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண பணிகள் தொடக்கம் - வார விடுமுறை இல்லாமல் இயங்க தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியாயவிலை கடைகள் வார விடுமுறை இல்லாமல் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

51 views

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

57 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

127 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

27 views

"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.