கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : ஜவுளி ஏற்றுமதி ரூ.1,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

கொரோனா அச்சத்தால், கரூர் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : ஜவுளி ஏற்றுமதி ரூ.1,000 கோடி  அதிகரிக்க வாய்ப்பு
x
கொரோனா அச்சத்தால், கரூர் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்க உள்ளது. இது குறித்து ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து  கூறுகையில்,  உலக அளவிலான ஜவுளி ஏற்றுமதியில் 70 சதவீதத்தை சீனா வைத்துள்ளது. இந்த  நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சீன பொருட்களை இறக்குமதி செய்ய உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. அதனால், சீனாவுக்கு செல்லும் ஜவுளி வியாபாரம் தற்போது இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. இதையடுத்து, தற்போது 3 ஆயிரத்து 500 கோடியாக உள்ள  கரூர் வர்த்தகம் மேலும் ஆயிரம் கோடி அதிகரிக்கும் என்று கூறினார்.  சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களின் தட்டுப்பாடு உள்ள நிலையிலும், ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நாச்சிமுத்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்