தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம் - பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
பதிவு : பிப்ரவரி 17, 2020, 07:23 AM
தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
2020-2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், தமிழக சட்டப் பேரவையில் கடந்த 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப் பேரவை கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும், ஜீரோ ஹவர் எனப்படும் நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

நேரமில்லா நேரத்தை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கின்றனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உள்ளார். தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. 20-ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

652 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

485 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

176 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

59 views

பிற செய்திகள்

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

1693 views

கொரோனா பிரத்யேக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் - குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரிக்கும் நெகிழ வைக்கும் உரையாடல்

கொரோனா தாக்கத்திற்கு ஆளாகாதே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலையை விட்டு சொந்த ஊர் வந்துவிடு என கண்ணீர் வடிக்கும் பெற்றோரிடம் இராணுவத்தில் வேலை செய்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் என கூறி பலரின் பாராட்டை பெற்றார்

250 views

காசிக்கு சுற்றுலா சென்றவர்கள் சிக்கி தவிப்பு - உடனடியாக மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

திருச்செந்தூரில் இருந்து, காசிக்கு சுற்றுலா சென்ற 6 பேர், தங்களை மீட்குமாறு தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

13 views

மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

17 views

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண பணிகள் தொடக்கம் - வார விடுமுறை இல்லாமல் இயங்க தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியாயவிலை கடைகள் வார விடுமுறை இல்லாமல் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

180 views

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.