சுருக்கு கம்பியில் சிக்கி போராடிய புலி - மீட்க முடியாமல் தவித்த வனத்துறை

நீலகிாி மாவட்டம் கோத்தகிாியில் சுருக்கு கம்பியில் சிக்கிய புலியை வனத்துறையினர் பிடிக்க முடியாமல் தவித்தனர்.
சுருக்கு கம்பியில் சிக்கி போராடிய புலி - மீட்க முடியாமல் தவித்த வனத்துறை
x
நீலகிாி மாவட்டம் கோத்தகிாி அருகே உள்ள உயிலட்டி கிராம குடியிருப்பு  பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில்  புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி போராடி கொண்டிருந்தது. உடனே அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா், புலியை மயக்க ஊசி செலுத்தி  பிடித்து வனப்பகுதியில் விட முற்பட்டனா். கால்நடை மருத்துவா்களும் வரவழைக்கப்பட்டனா். ஆனால் நேரம் செல்லச் செல்ல  புலி  துடித்துக்கொண்டிருந்தது. கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்ட நிலையில், துப்பாக்கி  தாமதமாக கொண்டு வரப்பட்டது. அதற்குள் புலி  அங்கிருந்து சுருக்கு கம்பியை இழுத்துக்கொண்டு புதருக்குள் நகா்ந்தது. இதனால் புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினா் திணறினா். இதனால் வேட்டை தடுப்பு காவலா்கள் மரத்தின் மேல்ஏறி புலியை கல்லைக் கொண்டு  விரட்ட முற்பட்டனா். இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். இதற்கிடையே, புலி தேயிலை தோட்டத்திலேயே படுத்துக்கொண்டது.  புலியை  பிடிக்க முடியாமல்  வனத்துறையினர் கோட்டை விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா்.


Next Story

மேலும் செய்திகள்