"19 ஆண்டுகளில் பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள்" - கல்வித் துறை அதிகாரிகள் தகவல்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 08:38 AM
தமிழக பள்ளிகளில் 171 பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல், 2019 வரை பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் எண்ணிக்கை மற்றும் அதன் மீதான நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முருகேஷ் என்பவர் பள்ளிக் கல்வித் துறையிடம் விவரம் கேட்டிருந்தார்.
 
அதற்கு உரிய பதில் அளிக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் அவர் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையில் பள்ளி கல்வித் துறை துணை இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள்,  தனியார் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, கடந்த 19 ஆண்டுகளில் 171 பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடந்திருப்பதாக ஆவணங்களை கல்வி அதிகாரிகள் தாக்கல் செய்தனர். 

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு உரிய பரிந்துரை அனுப்ப ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

664 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

197 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

149 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

55 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

28 views

பிற செய்திகள்

பொதுத்தேர்வு மற்றும் நீட்தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை - ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

4 views

ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் துவங்க வாய்ப்பு: 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பரில் துவங்கும் - 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்கும்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 views

சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வாங்கி சென்ற இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

14 views

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

6 views

தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்கு - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நடவடிக்கை

கும்பகோணத்தில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

5 views

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.