ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ. 20,000 வட்டி என விளம்பரம் - 9000 பேரிடம் ரூ.90 கோடி வசூல்

ஒரு லட்சம் ரூபாய்க்கு 20 ஆயிரம் வட்டி தருவதாக 90 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ. 20,000 வட்டி என விளம்பரம் - 9000 பேரிடம் ரூ.90 கோடி வசூல்
x
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனம் இயங்கி வந்தது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக இந்த நிறுவனத்தினர் விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி சின்னதிருப்பதியைச் சேர்ந்த சிவா என்பவர் முதலீடு செய்துவிட்டு காத்திருந்த நிலையில், வட்டி மற்றும் அசல் திரும்ப வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அவர் புகாரளித்த நிலையில், நிதி நிறுவனத்தை நடத்திய மூவர், 9 ஆயிரம் பேரிடம் இருந்து 90 கோடி ரூபாய் பணம் மோசடி செய்தது அம்பலமானது. இது தொடர்பாக, சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்,  சுப்பிரமணி ஆகியோரை கைது செய்த போலீசார்,  மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தகவல் அறிந்து தங்கள் பணத்தை திரும்ப தருமாறு, அந்த நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்