முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

தமிழகத்தில் தேனி உட்பட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு
x
தமிழகத்தில் தேனி  உட்பட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெப்பம் நிலவுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நீர்வரத்து குறைந்த நிலையில், ஜூன் வரை தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம்  செய்ய வேண்டிய நிலையில்,  அணையில் இருந்து திறக்கப்பட்ட 256 கனஅடி நீர் தற்போது 150 கன அடியாக  குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 168 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு உள்ளது. வரும் ஜூன் வரை மின் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இல்லாததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள  உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்