காவலாளி தாக்கியதில் நோயாளியை பார்க்க வந்தவர் உயிரிழப்பு ?
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:36 PM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனையில் காவலாளி தாக்கியதில் நோயாளியை பார்க்க வந்தவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு பகுதியை சேர்ந்த மரிய சுரேஷ் என்பவர், கடந்த ஞாயிற்று கிழமையன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமியாரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ரத்தினராஜ் என்பவருக்கும் மரிய சுரேஷ்-க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காவலாளி ரெத்தினராஜ், மரிய சுரேஷை தாக்கியதில், அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் தீ​விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மரிய சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் தலைமறைவான காவலாளி ரெத்தினராஜை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். 


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

195 views

பிற செய்திகள்

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

24 views

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் - ஸ்டாலின்

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

130 views

கொரோனா எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ரயில்வே போர்ட்டர்கள்

ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே போர்ட்டர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

11 views

வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு

கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

22 views

வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழக வியாபாரிகள் - உதவி செய்த மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் நன்றி

வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழக வியாபாரிகளை மீட்க உதவி செய்த மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

51 views

அரசு மருத்துவமனைகளுக்கு 6500 மருந்து தெளிப்பான் கருவிகள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பான் கருவிகள் மாவட்டங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.