தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்...

நடப்பு நிதியாண்டிற்கான, பட்ஜெட் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்...
x
நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில்புதிய அறிவிப்புகளும் சலுகைகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல், நடைபெற இருப்பதால், தற்போதைய அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதால், அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்