வேகமெடுக்கும் தனியார் ரயில்கள் : குறைந்தபட்சம் 15% பயண நேரம் குறையும்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 07:24 AM
தனியார் பயணிகள் ரயில்களை இயக்கும் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நாடுமுழுவதும் தற்போது 13 ஆயிரம் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு, மேலும் 4 ஆயிரம் ரயில்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் ரயில்வே துறைக்கு, இது மேலும் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் முதற்கட்டமாக நூறு வழித்தடங்களில் 150 ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்க ரயில்வே நிர்வாகம்  முடிவு செய்துள்ளது. உலகத்தர பெட்டிகளுடன்,  சொகுசு இருக்கைகள் , நவீன கழிப்பறைகள், உள்ளிட்ட அனைத்து அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களுக்கே அனுமதி வழங்கப்பட உள்ளது. விமானங்களை போன்றே உயர்தர உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் வழங்கப் படுவதோடு, பயணிகளின் சுமைகளை ஏற்றி, இறக்கும் பொறுப்பையும் தனியார் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் பயணிகளுக்கு இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப் படுவதோடு ரயில்கள் தாமதமானால் இழப்பீட்டு தொகையும் வழங்கப்படும்.

தற்போதைய ரயில்களை விட அதிவேகமாக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால், குறைந்தபட்சம் 15 சதவீதம் பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரயில் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை, அவற்றை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்படுவதால், கட்டணம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ரயில்களை தனியார் வாங்கி பராமரித்து இயக்கி வந்தாலும், அதன் ஓட்டுநராகவும், கார்டுகளாகவும், ரயில்வே ஊழியர்களே இருப்பார்கள். தற்போது, லக்னோ - புதுடெல்லி, அகமதாபாத் - மும்பை வழித்தடங்களில், தேஜஸ் ரயில்களை ஐஆர்சிடிசி நிறுவனம் இயக்கி வருகிறது. 

இதன் வெற்றியை தொடர்ந்தே தனியார் ரயில்களை இயக்கும், திட்டத்தை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்த ரயில்களை இயக்க இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும், அமெரிக்கா, ஜப்பான், சீனா, பிரா​ன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சர்வதேச நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. பயணிகள் கூட்டத்தை மனதில் கொண்டு,  முதல்கட்டமாக  பாட்னா, புதுடெல்லி, புனே, இந்தூர், தனப்பூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாக கொண்டு தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

664 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

197 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

149 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

55 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

28 views

பிற செய்திகள்

முகம் காணாத 10 மாத இன்ஸ்டாகிராம் காதல் - காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்த காதலி பேச மறுத்ததால், இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

0 views

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கிறது.

65 views

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு நிலையான இயக்க விதிமுறைகளை வகுத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

143 views

பொதுத்தேர்வு மற்றும் நீட்தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை - ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

9 views

ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் துவங்க வாய்ப்பு: 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பரில் துவங்கும் - 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்கும்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

42 views

சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வாங்கி சென்ற இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.