நளினி விடுதலை வழக்கு - 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஏழு பேர் விடுதலை குறித்து, பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட அதிகாரம் இல்லை என, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நளினி விடுதலை வழக்கு - 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
ஏழு பேர் விடுதலை குறித்து, பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட அதிகாரம் இல்லை என, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி, நளினி தரப்பில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,  7 பேரை விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகு,  சட்டவிரோதமாக நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி  ஆளுனரின் பரிந்துரைக்கு அனுப்பியதாகவும், அதுதொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என கூறினார். இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா? அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா. என்பது குறித்து தெளிவுபடுத்த, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்