சில்லறை வாங்குவது போல் நடித்து நூதன திருட்டு - ரூ.10,000 பணத்தை திருடிய ஈரானிய கொள்ளையர்கள் கைது
பதிவு : பிப்ரவரி 12, 2020, 05:54 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் நோட்டை மாற்றுவது போல் நடித்து வியாபாரியிடம் நூதன கொள்ளையில் ஈடுபட்ட ஈரான் நாட்டு கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த வியாபாரி டேவிட் என்பவரிடம் இரு வெளிநாட்டு நபர்கள்  ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். வியாபாரி டேவிட்டும் சில்லறை கொடுத்தனுப்பிய சிறிது நேரத்தில்,  அவர் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் காணவில்லை. இதனையடுத்து, புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றிய பின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளது தெரிய வந்தது. 

பிற செய்திகள்

எச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.

8 views

ஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை

ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

7 views

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

7 views

முதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது.

7 views

பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தும் இளைஞர்கள்

புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இளைஞர்கள் முடி திருத்தி வருகின்றனர்.

4 views

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.