கோவில் கொடை விழாவையொட்டி மாடு - குதிரை வண்டி பந்தயம் - போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மணக்கரை ஸ்ரீமலை பார்வதி அம்மன் கோவில் கொடைவிழாவை ஒட்டி, மாடு மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
கோவில் கொடை விழாவையொட்டி மாடு - குதிரை வண்டி பந்தயம் - போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மணக்கரை ஸ்ரீமலை பார்வதி அம்மன் கோவில் கொடைவிழாவை ஒட்டி, மாடு மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைக்க, மாடு மற்றும் குதிரை வண்டிகள் சாலையில் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இறுதியில், போட்டியில் வென்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்