பிளாஸ்டிக் பை பயன்பாடு - திடீர் சோதனை நடத்த உத்தரவு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 12:58 PM
பாலீத்தின் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க திடீர் சோதனைகள் நடத்துமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2019 ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு அமலானது. 

* இது தொடர்பான அரசாணை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

* அப்போது அரசு தரப்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோயில்களில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை வித்து சுற்றிக்கை அனுப்பி உள்ளதாகவும் கூறியது. மேலும் இது தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரியது. 

* அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கோயில்கள், தர்க்காக்கள், தேவாலயங்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார். 

* அதை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துமாறும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க அறிவுறுத்துமாறும் கூறி, வழக்கை மார்ச் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

பிற செய்திகள்

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் வேலைப் பளுவை குறைக்க ரோபோ - சென்னை இளைஞரின் கண்டுபிடிப்பு

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப் பளுவை குறைக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர்.

37 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

121 views

மர்காஸ் ஆப் பஸ்தி நசிமுதீன் அமைப்பு மீது வழக்கு - டெல்லி மாநகர காவல் ஆணையர் தகவல்

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்ளிகக் ஜமாத் மவுலானா சாத் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 269, 270, 271 மற்றும்120-பி கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

9 views

நிஜாமுதீன் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது" - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.

523 views

சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டு

உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.