நம்பர் பிளேட் மூலம் வாகனங்களை கண்காணிக்க சென்னையில் அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 11:52 AM
சென்னையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில்  கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற செயல்களை  தடுக்க மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நடவடிக்கையின் பேரில்  நகர் முழுவதும் முக்கிய இடங்களில் சுமார் 
2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் குற்ற செயல்கள் குறைந்ததோடு, குற்றவாளிகளும் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஓடும் லட்சக்கணக்கான  வாகனங்களை கண்காணிக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் ANPR  என்று சொல்லக்கூடிய அதிநவீன  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இது வரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ANPR  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து துல்லியமாக படம் எடுத்து, அவை செல்லும் இடங்களை கண்டறிய முடியும்  என்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சாலையில் செல்லும் ஒரு வாகனம் என்ன கலர்  அதன் நம்பர் பிளேட் விவரம் உள்ளிட்டவற்றை  துல்லியமாக ஒரு நொடியில் ஸ்கேன் செய்து காட்டுகிறது இந்த ANPR  சிசிடிவி கேமராக்கள். 
அவை  எடுக்கும் புகைப்படத்தை வைத்து ஓட்டுநர்களின் அடையாளங்களை கண்டு பிடிக்க முடியும் என்றும் ,  வாகனம் சாலையை கடக்கும் நேரம், செல்லுமிடம் உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும் என்றும் போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

நம்பர் பிளேட் விவரங்களை கட்டுப்பாட்டு மையத்தில்  பதிவிட்டால் வாகனம் சாலையில் கடந்து சென்ற இடங்களை கண்டறிந்து வாகன திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.  பகலில் மட்டும் அல்லாமல் இரவிலும் தெளிவாக படமெடுக்கும் வசதி உள்ளதால் 24 மணி நேரமும்  கண்காணிப்பை இந்த அதி நவீன கேமராக்கள் உறுதி செய்கின்றன. இதன் மூலம் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் , விபத்தை  ஏற்படுத்தி விட்டு தப்பிக்கும் வாகனங்களையும் எளிதாக  அடையாளம் காண முடியும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

708 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

245 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

175 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

75 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

51 views

பிற செய்திகள்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு?

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..?

58 views

500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி

மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது.

46 views

பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கு - ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தொற்று சூழலில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

தேனி சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை

தேனியில் புதியதாக தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கு உண்டான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினர்.

20 views

காவல்துறையினருக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்

பெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

10 views

நிவாரணம் வேண்டும் பறையிசை கலைஞர்கள்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பறையிசை கலைஞர்கள், 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.