டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரம் - இடைத்தரகர் அதிர்ச்சி வாக்குமூலம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் என 'மல்டிலெவல் மார்க்கெட்டிங்' நிறுவனம் போல செயல்பட்டதாக ஜெயக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரம் - இடைத்தரகர் அதிர்ச்சி வாக்குமூலம்
x
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில், கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை போலீசார், 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஓம்காந்தனுக்கு, குரூப்-4, குரூப்-2A, வி.ஏ.ஓ ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே, ஓம்காந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட மையங்களுக்கு அழைத்து சென்று, முறைகேடு நடத்தியது எப்படி என்பது குறித்து நடித்து காட்ட சொல்லி, அதை பதிவு செய்தனர். 

இதுவரை ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், 2016ஆம் ஆண்டு முதல் தான், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்பு கொண்டுள்ளார். மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் என மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் போல செயல்பட்டதாகவும் அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில், இதுவரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்