களியக்காவிளையில் உபா சட்டத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமாக கூடி, நாச வேலைகளை செய்ய திட்டமிட்டதாக, களியக்காவிளையில், செய்யது அலி என்பவரை உபா சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி, தென்காசி மற்றும் நெல்லையில் 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்புடைய திருவனந்தபுரத்தை சேர்ந்த செய்யது அலி என்பவரை களியக்காவிளையில் வைத்து தென்காசி போலீசார் கைது செய்தனர். இவரும் தற்போது உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story

