மலைப்பகுதியில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் : கிலோ ரூ.4க்கு கொள்முதல் செய்வதால் கவலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து கிலோ 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால், அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து கிலோ 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால், அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கிலோ 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்த நிலையில், தற்போது படிப்படியாக விலை குறைந்து, இன்று 4 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story

