திருவள்ளூர் : பட்டாக்கத்தியால் 'கேக்' வெட்டிக் கொண்டாட்டம்

திருவள்ளூர் அருகே இரவில் நடு சாலையில் பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
திருவள்ளூர் : பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
x
திருவள்ளூரை  அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த  அஜித்குமார் தமது 23 ஆவது பிறந்த நாளை நடு சாலையில்  பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். பொது மக்களை அச்சுறுத்தும்  வகையில் அவரும் அவரது நண்பர்களும் நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார்  பிறந்த நாள் கொண்டிய அஜித் குமார் அவருடன் கொண்டாட்ட த்தில் ஈடுபட்ட    நண்பர்கள்  ராகேஷ் என்ற கலைவாணன் , நரேன் ,  விஜய், மற்றும் பாலாஜி மீது  பொது இடத்தில் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்து தல்  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் . அஜித் குமார் மற்றும்  ராகேஷ் என்ற கலைவாணன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் மற்ற மூவரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்