தாய்க்கு பெருமை சேர்த்த 3 வயது சிறுவன் - 53 வினாடிகளில் 35 தலைநகரை கூறி அசத்தல்

மூன்று வயது சிறுவன் 53 வினாடிகளில் 35 மாநிலங்களின் தலைநகரை கூறி சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளார்.
தாய்க்கு பெருமை சேர்த்த 3 வயது சிறுவன் - 53 வினாடிகளில் 35 தலைநகரை கூறி அசத்தல்
x
திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில், தனது 3 வயது மகன் தான் உலகம் என, டெனிதா என்ற பெண் வாழ்ந்து வருகிறார். மகனான ஜெரேமியா டெனி, ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று ஆரம்பித்த தாய், மாநிலங்களின் பெயர்களும், அதன் தலைநகரங்களையும் விளையாட்டாக சொல்லி கொடுத்துள்ளார். சிறுவன், நாளடைவில், சரளமாக கூறியதை கண்டு, மகிழ்ச்சியடைந்த டெனிதா, இதை ஒரு சாதனையாக்க வேண்டுமென, "கலாம் விசன் 2020" என்ற சாதனை நிகழ்ச்சியில், பங்கேற்க வைத்துள்ளார். போட்டியின்போது, சிறுவன், சர்வ சாதாரணமாக கூற வரிசைப்படி, மனப்பாடம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில், மாநிலங்களின் பெயர்களை மாற்றி மாற்றி கேட்டபோதும் சரியாக கூறி அசத்தியுள்ளார். இதற்கு முன்பு 100 வினாடிகளில் கூறியதே சாதனையாக இருந்துவந்த நிலையில், சிறுவன் டெனியின் முயற்சி புதிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்